ஆனமலை அருகே தனியார் தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

ஆனமலை அருகே தனியார் தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

Update: 2024-01-01 15:57 GMT

மீட்கப்பட்ட மலை பாம்பு

பொள்ளாச்சி ஆனைமலையை அடுத்த கிழவன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகு.இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் அன்றாட பணிகளை மேற்கொண்டு இருந்தார். அப்போது தோட்டத்திற்குள் சுமார் 11 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து WHCT என்ற தன்னார்வ அமைப்பை சேர்ந்த சரண் மற்றும் மனோஜ் ஆகிய இருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பத்திரமாக மலைப்பாம்பை பிடித்தனர்.பின்பு மீட்கப்பட்ட மலை பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்கு பத்திரமாக விடப்பட்டது.

Tags:    

Similar News