கடத்தப்பட்ட மாணவி மீட்பு - வாலிபர் போக்ஸோவில் கைது

குளச்சலில் பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து, கடத்தப்பட்ட மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.;

Update: 2024-04-23 04:03 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டம் கோடிமுனை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து தேர்வு எழுதியுள்ளார். இந்த மாணவி  அருகில் உள்ள தனது சித்தி வீட்டில் இரவில் தூங்கச் செல்வது வழக்கம். சம்பவ தினமும் அவர் சித்தி வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி இரவு அந்த மாணவி வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அவர் மாணவியின் பெற்றோர் வீட்டிற்கு தேடிவந்துள்ளார். ஆனால் அங்கு மாணவியை காணவில்லை.      

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விஜின்  ( 26) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து விஜின் .ன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து தேடி வந்தனர்.  இந்த நிலையில் நேற்று குளச்சல் அருகே ஆலஞ்சி பகுதியில் நின்று கொண்டிருந்த விஜினை பிடித்து மாணவியை மீட்டனர். மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். விஜினை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News