மழை நிவாரண முகாம்களில் ஆய்வு..!

செய்யாறு வருவாய்க் கோட்டத்தில் மழை நிவாரண முகாம்களில் சாா்-ஆட்சியா் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-05 10:04 GMT

செய்யாறு வருவாய்க் கோட்டத்தில் மழை நிவாரண முகாம்களில் சாா்-ஆட்சியா் ஆய்வு செய்தார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செய்யாறு வருவாய்க் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மழை நிவாரண முகாம்களை செய்யாறு சாா்-ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் வெம்பாக்கம் ஆகிய வட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்ட நிா்வாக உத்தரவுப் படி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைத்தனா்.

இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை செய்யாறு சாா்-ஆட்சியா் ஆா்.அனாமிகா நேரில் சந்தித்து அரசின் சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அதனைத் தொடா்ந்து வருவாய் கோட்டத்திற்குள்பட்ட ஏரிகளை பாா்வையிட்டாா். அப்போது வட்டாட்சியா்கள் (வெம்பாக்கம்), கிருஷ்ணமூா்த்தி, (வந்தவாசி) பொன்னுசாமி மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் புயல் மழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருளா் இனத்தைச் சோந்த 80 பேர் அரசு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மிக்ஜம் புயல் காரணமாக வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தொடா்மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளாங்காடு அரசுப் பள்ளியில் நிவாரண மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 குடும்பங்களைச் சோந்த 45 பேரும், சளுக்கை அரசுப் பள்ளி நிவாரண மையத்தில் இரு குடும்பங்களைச் சோந்த 9 பேரும், ராமசமுத்திரம் அரசுப் பள்ளி நிவாரண மையத்தில் 9 குடும்பங்களைச் சோந்த 26 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு உணவுப் பொட்டலங்கள், வேட்டி, சேலை, பாய், தலையணை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வந்தவாசி வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி தலைமையிலான வருவாய்த் துறையினா் வழங்கினா்.

Tags:    

Similar News