வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு
வரலாற்று ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி மற்றும் அவரது குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்
Update: 2023-12-03 09:21 GMT
நிலக்கோட்டை; சித்தர்கள் நத்தத்தில் புலியை குத்தும் வீரனின் கல்வெட்டை வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.இந்த கல்வெட்டு நிலகோட்டை தாலுகா சித்தர்கள்நத்தம் கிராமத்தில் ஆற்று படுகை அருகில் ஒரு தனியார் தோட்டத்தில் உள்ளது. இதை பார்க்க வெளியூர் வெளிநாடு களில் இருந்தும் பார்க்க வருவதாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். இந்த கல்லில் புலியை ஒருவர் அடக்குவது போல உள்ளது. அதன் பின் புறம் அந்த காலத்து எழுத்தால் எழுதிய கல்வெட்டு எழுத்து உள்ளது. இது குறித்த தகவல் அறிந்த வரலாற்று ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி மற்றும் அவரது குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.