சிப்காட்டிற்கு எதிர்ப்பு: ஆற்றில் இறங்கி போராட்டம்
சிப்காட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்திற்கு உட்பட்ட மோகனூர், பரளி, வளையபட்டி ,லத்துவாடி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். விளை நிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு குழுவினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிப்காட்க்கு எதிர்ப்பு தெரிவித்து வளையப்பட்டி பகுதியில் உள்ள கரை போட்டான் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த மோகனூர் போலீசார் விவசாயிகளை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து விவசாயிகள் வளையப்பட்டி பகுதியில் உள்ள குன்னிமரத்தான் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.