குடிநீர் குழாய்களுக்கு மீட்டர் பொருத்த எதிர்ப்பு
தெடாவூர் பேரூராட்சியில், குடிநீர் குழாய்களுக்கு மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம், தெடாவூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், அம்ரூத் 2.0 திட்டத்தின் 'கீழ், ₹10.75 கோடி மதிப் பீட்டில் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதில் 70 சதவீத பணிகள் முடிவுற்ற நில யில், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க குழாய் பதிக்கும் பணி நடை பெற்று வருகிறது. 4, 9, 15 ஆகிய வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் நிலையில், அதற்கு மீட்டர் வைத்து கட்டணம் வசூலிப்பதாக கூறி, பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர்.
முன்னதாக,பழைய குடிநீர் குழாயை அகற்றி விட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பேரூ னராட்சி தலைவர் வேலிடம், பொதுமக்கள் கூறுகையில், அவர் அலட்சியமாகபதில் அளித்ததால், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் மாத வன் மற்றும் கெங்கவல்லி எஸ்எஸ்ஐ ராமசாமி, வருவாய்த்துறை அலுவலர் பரசுராமன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச் சுவார்த்தை நடத்தினர். அதன் பின், பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், ஆத்துார் - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பிறகு கெங்க வல்லி போலீசார் போக் குவரத்தை சீரமைத்தனர்.