100 ஆண்டுகள் பழமையான மரத்தை அகற்ற எதிர்ப்பு
பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மரத்தை மற்றும் விநாயகர் கோயிலை அகற்ற பா.ஜ.க வினர் எதிர்ப்பு தெரித்து மனு கொடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் சுமார் 100 வருட பழமையான அரச மரத்தையும் புதிய கட்டிடம் கட்டுவதற்காக அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ. க மற்றும் பா.ம.க சார்பில் வேலூர் அரசு மருத்துவமனை டாக்டர் அங்கப்பன் மற்றும் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டது. வேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள அரசமரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகர் இந்தப் பகுதி மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகர் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் விநாயகரை வேண்டிக்கொண்டு நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர்.
அரசமர விநாயகரை வேண்டிக் கொள்வதால் நல்லதே நடப்பதாக இப் பகுதி பொதுமக்களிடையே மிகுந்த நம்பிக்கையாக உள்ளது. இதை சிதைக்கும் விதமாக அரசமரம், வேப்ப மரம் மற்றும் விநாயகர் சிலையை அகற்ற கூடாது. மேலும் அரசு மருத்துவமனை கட்டிட வரைபடத்தில் சிறிது மாற்றம் செய்து 100 வருட பழமையான அரச மரத்தை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.