ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா
நாகர்கோவிலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தால் ஈடுப்பட்டனர்.
Update: 2024-01-12 08:50 GMT
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடந்த 8-ம் தேதி முதல் நான்கு நாட்கள் நாடு முழுவதும் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் மகா சம்மேளனம் சார்பில், நேற்று மாலை குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜநாயகம் வரவேற்றார். ஓய்வூதிய சங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் ஐவின் தொடங்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் ஜார்ஜ், ஐயப்பன், வைகுண்டநாதன், பென்சிக், சுரேஷ், தங்கப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.