இருசக்கர வாகனத்தின் குறுக்கே பாய்ந்த மாடு-ஓய்வு பெற்ற அரசு அலுவலர் பலி
Update: 2023-11-23 04:48 GMT
சிவகங்கை மாவட்டம், வேம்பங்குடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (62). இவர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலர். நேற்று இரவு சிவகங்கை - மேலூர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது புதுப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது மாடு குறுக்கே பாய்ந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்