ஓய்வு பெற்றோர் சங்கங்கள் கோரிக்கை வலியுறுத்தி பிரச்சார இயக்கம்

ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி பிரச்சார இயக்கம்

Update: 2023-12-06 17:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் திருச்சி, கரூர் மண்டலங்கள் சார்பில், கோரிக்கை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. டிசம்பர் 6 நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கம் ஓய்வு பெற்ற நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது, தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பைச் சார்ந்த சார்ந்த நிர்வாகிகள் சிவானந்தம், தங்கராசு வேதமாணிக்கம், ராமையா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பணியில் உள்ள ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு உருவாகியுள்ளது, இதில் போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும் செல்வக்குமான வித்தியாசத்தொகை அரசு வழங்க கோருதல், மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த பலன், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், 01.042003 க்கு பின் பணியில் சேர்ந்தவருக்கு ஓய்வூதியம் வழங்குதல்,பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல், இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும், 15 வது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தையை தொடங்கிட வேண்டும், மேலும் இதனை வலியுறுத்தி வரும் டிசம்பர் 19ஆம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிடுவது, என்பது உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை அனைவருக்கும் வழங்கி கோரிக்கைகள் குறித்து தொழிலாளர்களுக்கும் பொது மக்களுக்கும் எடுத்துரைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இந்த பிரச்சார இயக்கத்தின் போது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி கிளை தலைவர் கிருஷ்ணசாமி, ஏஐடியுசி சேர்ந்த கிளை தலைவர் கோவிந்தராஜ்,கிளைச் செயலாளர் நடராஜன் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றதொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News