அரசு பேருந்து மோதி ஓய்வு பெற்ற தொழிலாளி மரணம்
திருநெல்வேலி மாவட்டம், அகஸ்தியர்பட்டியை சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளில் அரசு பேருந்து மோதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-18 05:36 GMT
அரசு பேருந்து மோதி பலி
நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற மில் தொழிலாளி மனுவேல்ராஜ் (69). இவர் மீன் வாங்குவதற்காக சிவந்திபுரத்திற்கு நேற்று சென்றுள்ளார்.அப்போது சாலையை கடக்க முயன்றபோது திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் சென்ற அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து விகேபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.