தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வருகை - பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஓசூர் வருவதையொட்டி நேற்று தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-09 03:58 GMT

ஆலோசனை கூட்டம் 

மூக்க தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பிற்கிணங்க 2024-நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பத்தை முன்னிட்டு கழக துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி  தலைமையில், டி.கே.எஸ்.இளங்கோவன்,  ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர், பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன்,  அமைச்சர் டி.ஆர்.பி.இராஜா, அரசு கொறடா  கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.எழிலரசன், அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவினரின் முன்னிலையில் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று  மாலை 3.00 மணி அளவில் ஓசூர் கிரான்ட் பேலஷில் நடைபெற உள்ளது. அதுசமயம் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழில்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடன் நேற்று தருமபுரி மாவட்ட கழக அலுவலகத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி  தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News