பட்டாசு கடைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு
பட்டாசு கடைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-28 10:02 GMT
பட்டாசு கடைகளில் ஆய்வு
கண்ணமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை செய்து வரும் கடைகளில் ஆரணி வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, தீயணைப்பு நிலைய அலுவலர் சிவஞானம் ஆகியோர் உரிமம், போதிய பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் உடனிருந்தனர். இதேபோல் ஒண்ணுபுரம், ராமசாணிக்குப்பம், வண்ணாங்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள பட்டாசு கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது என கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.