அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் கலெக்டர் பங்கேற்பு

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் கலெக்டர் பங்கேற்றார்.

Update: 2024-06-15 04:03 GMT

வருவாய் தீர்ப்பாயம் 

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி முன்னிலையில்  இன்று (14.06.2024) நடைபெற்றது.    

இதில்  கன்னியாகுமரி கிராமம், லீபுரம் கிராமம், அகஸ்தீஸ்வரம் கிராமம், கோவளம் கிராமம், அழகப்பபுரம் கிராமம், அஞ்சுகிராமம் கிராமம், கொட்டாரம் கிழக்கு கிராமம், கொட்டாரம் மேற்கு கிராமம், வடக்கு தாமரைகுளம் கிராமம், தெற்கு தாமரைகுளம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி,  சாலை வசதி  உள்ளிட்ட  பல்வேறு  நலத்திட்ட  உதவிகள் கோரி  107 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.       

 மேலும், கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் மாவட்ட ஆட்சித்தலைவரால் தணிக்கை செய்யப்பட்டது.  ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி நடவடிக்கையாக 6 பயனாளிகளுக்கு பட்டா உட்பிரிவும், 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் மற்றும் 1 பயனாளிக்கு நலிந்தோர் குடும்ப நலத்திட்ட உதவி ஆகியவை வழங்கப்பட்டது.         

இந்நிகழ்ச்சியில்,  அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News