மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள்
சயனபுரம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சேதமான நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
Update: 2024-06-20 01:16 GMT
மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் ,நெமிலி பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.மழையால் சயனபுரம் கிராமத்தில் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நாசமானது. இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள் சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.