தகவல் அறியும் உரிமை சட்ட பயிலரங்கம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தகவல் அறியும் உரிமை சட்ட பயிலரங்கம் நடைப்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் டென்னிசன் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிலரங்கம் நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் தலைவர் அருள் சிவா தலைமை வகித்தார். பொருளாளர் வழக்கறிஞர் செந்தில் முருகன், செயலாளர் வழக்கறிஞர் அசாருதின், கூட்டமைப்பின் உறுப்பினர் முகம்மது சபீர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிலரங்கத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்ட பொதுமக்களின் சட்ட அறிவை கூர்மை படுத்தும் நோக்கில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் வரலாறு, பிரிவுகள், எவ்வாறு முதல் மனு எழுதுவது எவ்வாறு ஆணையத்தை அனுகுவது, தகவல்களை எளிமையாக பெறுவது எப்படி, என்பது தொடர்பாக பயிற்றுனர்களுக்கு (ஆர்.றி.ஐ) மதுரை கே. ஹக்கிம் விளக்கி கூறினார்.
மேலும் நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சா.மு பரஞ்சோதி பாண்டியன் நிலம் தொடர்பான எண்ணற்ற விவரங்களை கருத்துரை வழங்கி பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் சட்டத்தை பயிற்றுவித்தனர்.