சித்தலுார் கோவிலில் ரூ.15.91 லட்சம் காணிக்கை
சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் ரூ.15.91 லட்சம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
Update: 2024-03-15 07:10 GMT
தியாகதுருகம் அடுத்த பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன், தலைமையில் செயல் அலுவலர் ரகுவராஜ்குமார், ஆய்வாளர் சுகன்யா கோவில் தர்மகர்த்தாக்கள், பூசாரிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அதில் பக்தர்கள் செலுத்திய 15 லட்சத்து 91 ஆயிரத்து 55 ரூபாய் இருந்தது. தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் எதுவும் இல்லை.