நோய் தொற்று ஏற்படும் அபாயம்

திருப்பத்தூரில் சாலையோரம் கொட்டும் குப்பை கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

Update: 2023-12-09 11:03 GMT

 திருப்பத்தூரில் சாலையோரம் கொட்டும் குப்பை கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்காயம்செல்லும் முக்கிய சாலையாக திகழ்ந்து வருகின்றது இந்த சாலை வழியாக பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.   இந்த சாலை வழியாக பல ஆயிரம் பொதுமக்கள் பயணிக்கின்றனர் இந்த சாலை ஓரத்தில் மர்ம நபர்கள் இறைச்சி கழிவுகள். கோழி கழிவுகள். மற்றும் குப்பை கழிவுகளை. இரவு நேரத்தில் கொட்டி செல்கின்றனர்.

  இந்த குப்பைக் கழிவுகளில் இருந்து ஒரு வகையான ரசாயனம் போல் வெளியேறி காற்றில் கலந்து துர்நாற்றம் வீசிவருவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் நோய் தொற்றிர்க்கு ஆளாகி வருகின்றனர் இது குறித்து துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Tags:    

Similar News