ஆர்.என்.ஆர். நெல் ரகம் ரூ.2,089-க்கு விற்பனை

கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆர் என் ஆர் நெல் ரகம் ரூபாய் 2089க்கு விற்பனை செய்யப்படுவதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-20 01:25 GMT

ஆர்.என்.ஆர். நெல் ரகம் ரூ.2,089-க்கு விற்பனை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லை கலவை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று கலவை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆர்.என்.ஆர். ரகம் நெல் அதிகபட்சமாக ரூ.2,089-க்கு விற்பனையானது. அதேபோல் ஸ்ரீ் ரகம் நெல் 1,936 ரூபாய்க்கும், மகேந்திரா ரகம் அதிகபட்சமாக ரூ.1,910-க்கும், குறைந்த பட்சமாக 1,722 ரூபாய்க்கும், குண்டு நெல் அதிகபட்சமாக ரூ.1,459-க்கும், குறைந்த பட்சமாக ரூ.1,439-க்கும், கோ 51 ரகம் அதிகபட்சமாக 1,429 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.1,392-க்கும் விற்பனையானது என ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மதன்பண்டியன் தெரிவித்தார்.
Tags:    

Similar News