மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

சாலை வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்பும் போது நிலைதடுமாறி வீழுந்த விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

Update: 2023-10-25 04:26 GMT

ஸ்டீவ் அகஸ்டின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தடிக்காரன்கோணம் வீரப்புலி பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின், இவருடைய மனைவி ஜெபா. இவர்களுக்கு 2 மகன்கள் உண்டு. இதில் மூத்த மகன் ஸ்டீவ் அகஸ்டின் (வயது 19), நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் தன்னுடைய நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் மேக்காமண்டபத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சி முட்டிடிச்சான் பாறை அருகில் உள்ள வளைவான பகுதியில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதனால் ஸ்டீவ் அகஸ்டின் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தொிவித்தனர். இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News