100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம்,வேலை வழங்காததை கண்டித்து சாலைமறியல்.

Update: 2023-11-10 02:30 GMT

சாலைமறியல் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த வெங்கடபுரம் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் செய்து வந்த வேலை நிறுத்தி வைத்திருப்பதை கண்டித்தும்,கடந்த ஒரு மாதமாக ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும் பொதுமக்கள் திமிரி - வேலூர் சாலையில் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மீண்டும் பணியை வழங்க வேண்டும் மேலும் ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய தொகையை வழங்க வேண்டும் என தெரிவித்தனர் மேலும் ஊராட்சி மன்ற தலைவர் தனது சுய விருப்பம் காரணமாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலையை வழங்குவதில் பாகுபாடு பார்ப்பதாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர் இந்த தகவலை அறிந்த திமிரி பி,டி,ஒ அன்பரசன் மற்றும் காவல் துறையினர் மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை முதல் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு மாத ஊதிய தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்

Tags:    

Similar News