விவசாயிகள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;

Update: 2024-03-08 09:43 GMT


திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து விலைப் பொருட்களை விவசாயிகள் எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர் இதே போன்று இன்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் விளைவிக்கப்பட்ட பணி பயிரை விற்பனைக்காக எடுத்து வந்தனர் ஆனால் விலை நிர்ணயம் குறைவாக செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் எதிரில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இன்றும் விளைபொருட்களுக்கு குறைவான விலை நிர்ணயம் செய்யப்படுவதால் இன்று திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் எதிரில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களில் சென்றவர்கள் போக்குவரத்து பாதிப்பால் அவதியடைந்தனர்.

Tags:    

Similar News