குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்

தென்காசி மாவட்டம், பிரானூர் பகுதியில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-04-07 10:15 GMT
தென்காசியில் குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்
தென்காசி மாவட்டம் தென்காசி பிரானூர் பகுதியில் சுமார் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை பின்பு அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News