விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

விருதுநகரில் கழிவுநீருடன் மழை நீர் புகுந்ததால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-12 16:22 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 16வது வார்டு கம்மாபட்டி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுவது அந்த அடைப்பை நகராட்சி நிர்வாகம் முறையாக சரி செய்யாத காரணத்தினால் இன்று மாலை ஒரு மணி நேரம் விருதுநகரில் பெய்த மழையின் காரணத்தால் கம்மாபட்டி பகுதிக்குள் சுமார் 20 வீடுகளுக்குள் மழை நீர் கழிவு நீருடன் கலந்து புகுந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ராமமூர்த்தி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் கொட்டு மழையில் குடை பிடித்தவாறு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து அங்கு வந்த டி எஸ் பி பவித்ரா போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

சாலை மறியலில் ஈடுபட்டவர் அங்கிருந்து கலைந்து சென்றனர் போக்குவரத்து சரி செய்யப்பட்ட நிலையில் வீடுகளுக்குள் புகுந்த நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News