சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் - பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு

மேட்டூரில் சாலையை ஆக்கிரப்பு செய்து கட்டப்படும் கட்டிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-11-05 08:38 GMT

மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மேட்டூர் 29-வது வார்டு ஜீவா நகர் பகுதியில் சுமார் 500- கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, முல்லை நகர் செல்வதற்கு 80 அடியில் பிரதான சாலை உள்ளது. இந்நிலையில் தனி நபர் ஒருவர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து புதியதாக கட்டிடம் கட்டி வருகிறார். இதனை நிறுத்தகோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மேட்டூர்- ஈரோடு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிட பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News