சாலை புதுப்பிக்கும் பணி பெரும்பாக்கத்தில் துவக்கம்

அடுத்த மாதத்தில் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Update: 2023-12-20 02:25 GMT
சாலை புதுப்பிக்கும் பணி பெரும்பாக்கத்தில் துவக்கம்
செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லுார் அடுத்த பெரும்பாக்கம் கல்லுாரி சாலை, 1.6 கி.மீ., நீளம், 50 அடி அகலம் உடையது. பெரும்பாக்கம் ஊராட்சி வசம் இருந்த இந்த சாலை, கடந்த ஆண்டு, நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில், சாலை புதுப்பிப்பு பணிக்காக, 7.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு பிரிவாக சாலை போடப்படுகிறது. 1.1 கி.மீ., துாரத்தில் தார் சாலையும், 500 மீட்டர் நீளத்தில் சிமென்ட் சாலையும் போடப்படுகிறது. இதற்கான பணிகள், ஐந்து மாதங்களுக்கு முன் துவங்கின. மழைக்கு முன் முடிய வேண்டி பணியில், சாலையின் குறுக்கே நீர்வழிபாதை அமைக்க வேண்டி இருந்ததால் காலதாமதம் ஆனது. மழை நின்ற நிலையில், மீண்டும் பணி துவங்கியுள்ளது. தார் சாலை அமைத்த பகுதியில், இறுதி கட்ட பணி உள்ளது. மேலும், சாலை மைய தடுப்பு மற்றும் தெருவிளக்கு அமைக்கப்பட உள்ளது. மேலும், 500 மீட்டர் துாரத்தில் சாலை போடும் பணி நடக்கிறது. இப்பணிகளை, அடுத்த மாதத்திற்குள் முடிக்கும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tags:    

Similar News