சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

பூண்டி‌ அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-31 09:42 GMT

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழா கடந்த 15ம் தேதி துவங்கி வரும் பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில், பூண்டி‌ அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சு.மோகன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் கோ.மோகன், உங்கள் பாதுகாப்பு டிரஸ்ட் பாபு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மு.ஜம்பு வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு எளியமுறையில் எடுத்துரைக்கப்பட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. சாலையில் நடக்கும்போது வாகனத்தில் செல்லும்போதும் எப்படி செல்ல வேண்டும் என்றும் விதிமுறைகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் பேருந்தில் செல்லும்போது கை, தலையை வெளியில் நீட்டக்கூடாது என்றும் படியில் தொங்க கூடாது என்றும் முழுமையாக சாலை விதிகளை பின்பற்றவேண்டும் என்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கோ.மோகன் செய்முறை விளக்கம் அளித்தார். இதன்பிறகு மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதில் ஆசிரியர்கள் அனைவருக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News