நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-01-31 05:49 GMT

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகு, விழுப்புரம் கட்டுமான பராமரிப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் கோட்டம் நெடுஞ்சாலை பாதுகாப்பு அலகு பொறியாளர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். அப்போது இருசக்கர வான ஓட்டிகள் தலைகவசம் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும், அதிவேகம் ஆபத்தை விளைவிக்கும் உள்ளிட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துக்களை பேசினார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஆறுமுகம், விழுப்புரம் சாலை பாதுகாப்பு அலகு உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன், விழுப்புரம் சாலை பாதுகாப்பு அலகு உதவி பொறியாளர் ராஜஸ்வேதா, டோல்கேட் மூத்த நிர்வாகிநரேஷ், நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள், சாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News