சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி
கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்ற சாலை விழிப்புணர்வு கண்காட்சியை ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.;
Update: 2024-02-07 05:11 GMT
சாலை விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் போக்குவரத்து துறை சார்பில் பஸ்சில் அமைக்கப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டனர்.
கண்காட்சியில், ஹெல்மெட் அணிவதன் அவசியம், படியில் பயணிப்பதால் ஏற்படும் இழப்புகள், மது அருந்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு விழிப்புணர்வு கருத்துகள் கொண்ட படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தது.