ஊத்தங்கரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஊத்தங்கரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்

Update: 2024-01-05 14:26 GMT

பேரணியை தொடங்கி வைத்த நீதிபதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் செந்தில்குமார் ராஜவேல் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.அமர் ஆனந்த் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ்.சஹானா ஆகியோர் பேரணி பற்றி விளக்கம் கொடுத்தனர். பேரணியில் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். பெரியசாமி, உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன், ஆசிரியர்கள் செந்தில், முத்துக்குமார்,

பூமணி, ஜெயசீலன், தமயந்தி,கவிதா, நிர்மல், ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் த.பிரபாவதி, செயலாளர் ஜி.வஜ்ரவேல் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவலர்கள், பொதுமக்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியை சேர்ந்த ஜேஆர்சி, என்சிசி,

என்எஸ்எஸ், பசுமை படை, ஸ்கவுட் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊத்தங்கரையில் உள்ள கல்லாவி ரோடு, அரசமரம், ரவுண்டானா, காவல் நிலையம் வழியாக பேரணி நடைபெற்றது.

முன்னதாக தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. பேரணிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு சார்ந்த லாவண்யா மற்றும் இனியன் ஆகியோர் செய்திருந்தார்கள்.

Tags:    

Similar News