விருதுநகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர் பேரணி

விருதுநகரில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர் பேரணி நடைபெற்றது.

Update: 2024-02-13 15:20 GMT
பேரணியில் கலந்து கொண்டவர்கள் 

விருதுநகரில் சாலைப்பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட உபயோகிப்பாளர் கமிட்டி சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வித்யா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பைத் தவிர்ப்பீர், சீட்பெல்ட் அணிவது பாதுகாப்பு இதுவே பயணத்தின் உயிர்காப்பு, வளைவில் முந்தாதே வாழ்க்கையை தொலைக்காதே, சாலை விபத்தில் அவசர உதவிக்கு 108, காவல்துறை உதவிக்கு 100, வாகனத்தில் வரும் புகை நம் வாழ்க்னக்கு பெரும் பகை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியானது டி.டி.கே.சாலையில் உள்ள அரசு உதவி பெறும் ஹாஜிபி செய்யது முகம்மது மேல்நிலைப் பள்ளியில் ஆரம்பித்து, பாவாலி ரோடு, புழு காணூரணி ரோடு, பழைய பேருந்து நிலையம், கார்னேசன் முக்கு, மாரியமன் கோவில் திடல், தேசந்து மைதானம் வழியாக வந்து சீதக்காதி தெருவில் உள்ள ஹாஜி சிக்கந்தர் ஹவா பி வி பெண்கள் நிலைப் பள்ளியில் முடிவடைந்தது.

  இந்த பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், நுகர்வோர் உபயோகிப்பாளர் உரிமைக் கமிட்டியின் தலைவர் முகம்மது எஹியா, செயலாளர் மகேந்திரன், துணைத்தலைவர் சுதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News