நாமக்கல் நவோதயாப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது | கிங் நியூஸ்24X7

நாமக்கல் நவோதய பள்ளி
ஏப்ரல் 08: நாமக்கல் தி நவோதயாஅகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் இன்று 08.04.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சேலம் கோட்ட அலுவலகம் சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சாலைப் பாதுகாப்புபயணம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பள்ளியின் பொருளாளர் திரு. கா.தேனருவிஅவர்கள்அனைவரையும் வரவேற்று தலைமை ஏற்று விழாவை நடத்தினார்.

தமிழ்நாடு அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் விபத்தில்லா சாலை பாதுகாப்பு பயணம் என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து பள்ளி மாணவ மாணவியருக்கும்,பொது மக்களுக்கும் பல வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நெடுஞ்சாலைத் துறை சேலம் கோட்டத்தின் இயக்குநர் திருமதி ஆ.குமுதா அவர்களும் துணை கோட்ட பொறியாளர் திரு. ஊ.சுப்ரமணியம் அவர்களும் துணைப் பொறியாளர் திருீயு.நந்தினிஅவர்களும் கலந்து கொண்டனர், மாணவர்களுக்கு சாலைபாதுகாப்பு குறித்தும்,சாலை விதிகளை மதித்தல்,சாலை விதிகளை அத்துமீறல்,மற்றும் சாலை விதிகளையும் சட்டங்களையும் பின்பற்றுதல், 18வயது நிரம்பியவர்கள் மட்டுமே வாகனங்களை இயக்குதல், இருசக்கரவாகனத்தை சாலையில் இயக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய செயல்கள் போன்ற பல்வேறு அரிய தகவல்களை கானொலிகாட்சிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
நிகழ்ச்சியின் நிறைவாகமாணவர்களுக்குகற்றல் பரிசோதனை வினாடிவினாப் போட்டி நடத்தப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளிமுதல்வர்,பள்ளி நிர்வாகத்திற்கும்,சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலக இனை இயக்குநர் அவர்களுக்கும் துணை இயக்குநர்,உதவி இயக்குநர் அனைவருக்கும் நன்றி கூறிபாராட்டினார்கள். மாணவர்கள் இந்த விழிப்புணர்வு பயிற்சியை பெற்றோர்களுக்கும். பொதுமக்களுக்கும் கொண்டு சென்றுஅனைவரின் உயிரையும் பாதுகாக்கும் வகையில் செயல்படவேண்டும் என்று கூறிவாழ்த்தி நிகழ்ச்சிக்கு நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.