அரியலூரில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க ஆய்வு கூட்டம்
அரியலூரில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-20 15:52 GMT
ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
அரியலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க கூட்டம், அரியலூர் நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் மோடி அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், அதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஜனவரி 23 ஆம் தேதி அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தீர்மானிக்கபட்டது.
இதில் சிஐடியு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் துரைசாமி, துணை தலைவர் சிற்றம்பலம் மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.