சாலை பணியாளர்கள் சங்கம் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

Update: 2023-12-07 01:21 GMT

சாலை பணியாளர்கள் சங்கம் போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன முழக்க போராட்டம் கோட்டர் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. தொழிற்சங்க ரீதியான கோரிக்கைகள் மீது பாரா முகம் காட்டும் தலைமை பொறியாளர் மெத்தன போக்கை கண்டித்தும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் இறந்தோரின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் திண்டுக்கல் கோட்டத்தில் எட்டு வருடங்களாக பதவி உயர்வு வழங்காத நிலை உள்ளது. உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News