சாலைப் பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு

தூத்துக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் இருந்து எட்டையாபுரம் சாலையில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-17 03:50 GMT

மேயர் ஆய்வு

தூத்துக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் இருந்து எட்டையாபுரம் ரோட்டினை இணைக்கும் சாலையில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகரை முன்னேற்றும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் மாநகர மக்களின் கோரிக்கையினைபடுத்து மக்களின் பயன்பாட்டில் இருந்த சாலைகள் தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. அது போல மீனாட்சிபுரம் பகுதியில் இருந்து எட்டையாபுரம் ரோட்டினை இணைக்கும் சாலையில் நடைபெற்று வரும் பணிகளையும் மேலும் அதனருகே இது போன்று ஒரு சாலை இருப்பதாக வந்த பொதுமக்களின் தகவலையடுத்து அதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன் மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து அந்தப் பகுதியின் நகர திட்ட வரைபடத்தின்படி பார்வையிட்டு சாலை வரும் நாட்களில் அமைத்து தரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற பணிகளினால் மாநகர எல்லைக்குள் போக்குவரத்து குறையும் என்றார். ஆய்வின்போது, உடன் மண்டல தலைவர் கலைச்செல்வி, திமுக வட்ட செயலாளர் கதிரேசன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
Tags:    

Similar News