கோவில் பூட்டை உடைத்து கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம், ராக்காச்சிபுரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-13 08:34 GMT

கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ராக்காச்சிபுரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை மாலையில் வழக்கம்போல் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை கோவிலை திறக்க வந்த போது கோவில் பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அம்மனின் 2 கிராம் மூக்குத்தி,150 கிராம் வெள்ளி கொலுசு, 5 குத்துவிளக்குகள், 1 தூண்டி விளக்கு மற்றும் உண்டியலில் இருந்த ரூ.1000 திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் பூசாரி மீனாட்சிசுந்தரம் நத்தம் போலீஸில் புகார் அளித்தார்.
Tags:    

Similar News