மது அருந்தியரை தாக்கி கொள்ளை - ஆறு பேர் கைது

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டெட் தொழிலாளரிடம் கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-01-11 09:58 GMT

கொள்ளையில் ஈடுப்பட்டவர்கள் கைது

தென்காசி மாவட்டம், சுரண்டை,  வரகுணராமபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜயன் (50). மனை வாங்கி விற்கும் தொழில் (ரியல் எஸ்டேட்) செய்து வருகிறாா். இவா், கடந்த 6.9.2023இல் ஆலங்குளத்துக்கு வேலை விஷயமாக வந்துவிட்டு, அப்பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் மது அருந்தியுள்ளார். அப்போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 3 போ் உள்பட 6 போ் சோ்ந்து அவரைத் தாக்கி அரிவாளால் மிரட்டி, அவா் அணிந்திருந்த 42 கிராம் தங்க நகைகள், பைக் பெட்டியில் இருந்த 160 கிராம் வெள்ளி நகைகள், ரூ. 60 ஆயிரம் ரொக்கம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி, பைக் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்ப்பியுள்ளனர்.

இவற்றின் மதிப்பு ரூ. 4 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயன் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரித்தனா். அதில், மாறாந்தையைச் சோ்ந்த சமுத்திரம் மகன் அழகு சுந்தரம்(32), கணேசன் மகன் சூரிய வசந்தன் என்ற சூரியா (25), ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து(24) அரிகேசவ நல்லூா் முருகன் மகன் சுதாகா்(19), வீரவநல்லூா் கிருஷ்ணகுமாா் மகன் முருகேசன்(20), கல்லத்திகுளம் மாடசாமி மகன் மகேஷ்(28) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. மாறந்தையில் பதுங்கியிருந்த அவா்களை தனிப்படை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும், அவா்களிடமிருந்து 40 கிராம் தங்கநகைகள், 200 கிராம் வெள்ளி நகைகள், 1 கைப்பேசி, 2 பைக்குகள் ஆகியவறை மீட்டனா்.

Tags:    

Similar News