சங்கரன்கோவில் அருகே துணிகரம் - வீட்டில் கொள்ளை !

சங்கரன்கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை - காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை;

Update: 2024-04-04 04:45 GMT

கொள்ளை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்குபனவடலிசத்திரம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை-கஸ்தூரி தம்பதியினர். தங்கதுரை மேலஇலந்தைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகின்றார்.

இவரது மனைவி கஸ்தூரி வருவாய் ஆய்வாளராக மானூர் பகுதியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டியில் உள்ள இவரது உறவினர் வீட்டுக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்து நிலையில் இருந்திருந்தது.

Advertisement

இதனை கண்ட அதிர்ச்சியடைந்த தம்பதியினர் வீட்டினுள் உள்ள பார்த்தபோது அங்கு வைத்திருந்த 58பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது இந்நிலையில் பனவடலிசத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் இது குறித்து பனவடலிசத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதிக்குள் இது போன்ற கொள்ளை சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News