அடுத்தடுத்த கடைகளில் புகுந்து துணிகர திருட்டு -மர்ம நபருக்கு வலை

சேலம் மாவட்டம், ஆத்தூர் மெயின்ரோட்டில் உள்ள அடுத்தடுத்த கடைகளில் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-01-08 07:50 GMT
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பேரூராட்சி ஆத்தூர் மெயின்ரோட்டில், வணிக வளாகங்கள் உள்ளது. அங்கு அண்ணாமலை (40). என்பவர் பஞ்சர் கடை வைத்துள்ளார், அதேபோல் பிரகாஷ்(42) என்பவர் மளிகைக்கடை வைத்துள்ளார். அடுத்த காம்ப்ளக்ஸில் செல்வம் (48) என்பவர் லேத்பட்டறை வைத்துள்ளனர். நேற்று முன் தினம் இரவு, வழக்கம் போல் கடைகளை மூடி விட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை, கடையை திறக்க வந்த போது, அண்ணாமலை பஞ்சர் கடை பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த பணம் ₹10 ஆயிரம் மற்றும் கட்டிங் மெஷினும், மளிகை கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ₹6 ஆயிரத்தை திருடிக்கொண்டு, செல்லம் லேத்பட்டறயில் பணம் எதுவும் இல்லாததால் அங்கிருந்து மர்ம நபர் தப்பி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் எஸ்ஐ நிர்மலா, எஸ்எஸ்ஐ கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News