சேலத்தில் ரோட்டரி கிளப் ஆப் சேலம் மிட்டவுன் தலைவர் பதவி ஏற்பு

சேலத்தில் ரோட்டரி கிளப் ஆப் சேலம் மிட்டவுன் தலைவர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

Update: 2024-06-28 11:00 GMT

புதிய தலைவர் பதவி ஏற்பு 

ரோட்டரி கிளப் ஆப் சேலம் மிட்டவுன் புதிய தலைவர் பதவி ஏற்பு விழா அம்மாபேட்டை காமராஜர் காலனியில் சம்பந்தம் நூற்பாலை கூட்ட அரங்கில் நடைபெற்றது. புதிய தலைவராக தாரை.கே.ராஜகணபதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு முன்னாள் தலைவர் கே.ராமலிங்கம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஆளுனர் ஒளிவண்ணன், டாக்டர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். டாக்டர் சுகுமார், தாரை.குமரவேல், தேவராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். துணை ஆளுனர் மனோஜ்பிள்ளை புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் செயலாளர் மோகன், ராஜேஸ்வரன், மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News