வேலூர் கோர்ட்டில் ரவுடி வசூர்ராஜா ஆஜர்!
வழிப்பறி வழக்கில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நீதிமன்றத்தில் ரவுடி வசூர்ராஜா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-19 11:45 GMT
ரவுடி வசூர்ராஜா
வேலூரை அடுத்த புதுவசூரை சேர்ந்தவர் ராஜா என்ற வசூர்ராஜா (36).பிரபல ரவுடியான இவர் வழிப்பறி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். வசூர்ராஜா கடந்தாண்டு வேலூர் சத்துவாச்சாரியில் பெயிண்ட் கடை உரிமையாளரை கத்தியை காட்டி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்த வழக்கு வேலூர் சப்-கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்குவிசாரணைக்கு வந்தது. இதையொட்டி கோவையில் இருந்து வசூர்ராஜா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் வேலூர் கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பலத்த காவலுடன் கோவை ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.