வியாபாரியிடம் ரூ.1.14 லட்சம் பறிமுதல்!

வேலூர் கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வியாபாரியிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த பணத்தை, கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-30 08:30 GMT

வேலூர் கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வியாபாரியிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த பணத்தை, கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தவிர்க்க பல்வேறு இடங்களில் பறக்கும் படை குழுவினர், நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தனர். அவரிடம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 400 இருந்தது. ஆனால் அதற்கான ஆவணம் ஏதும் அவரிடம் இல்லை. விசாரணையில் அவர் வேலூரை சேர்ந்த நர்பத்குமார் (வயது 22) என்பதும் சித்தூரில் இருந்து வியாபார நிமித்தமாக வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. எனினும் அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை காட்பாடி தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News