ரூ. 1.34 கோடி நில மோசடி  ஏமாற்றிய பெண் கைது

ஆவடி அருகே ரூ. 1.34 கோடி மதிப்பில் நில மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-12-15 08:58 GMT

 பைல் படம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆவடி, சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மங்கையர்க்கரசி, 63. இவர், ஆவடி பருத்திப்பட்டில் உள்ள 36 சென்ட் நிலத்தை விற்க முடிவு செய்தார். அப்போது, நில புரோக்கர் ஸ்ரீனிவாசன் என்பவர் வாயிலாக, சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஷமிலத் ஜமாலுதீன், 49 என்பவரிடம் 1.5 கோடி ரூபாய்க்கு விலை பேசியுள்ளார்.

இந்நிலையில், ஷமிலத் ஜமாலுதீன் நிலத்தின் பெயரில் வங்கியில் கடன் பெற வேண்டும் என கூறி, மூன்று காசோலைகளை கொடுத்து மூதாட்டியை கையொப்பமிட கூறியுள்ளார். நிலத்திற்கான பணம் வங்கியில் தயாராக உள்ளதாக கூறி ஏமாற்றி, நிலத்தை ஷமிலத் ஜமாலுதீன் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டார்.

அந்த நிலத்தின் மதிப்பு 1.34 கோடி ரூபாய். மூதாட்டி, காசோலையை வங்கியில் செலுத்திய போது, அது கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. மூதாட்டியின் புகாரை அடுத்து, இது குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடியில் ஈடுபட்ட ஷமிலத் ஜமாலுதினை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News