ரூ. 1.42 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் - மாவட்ட ஆட்சியர் தகவல்

ரூ. 1.42 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் - மாவட்ட ஆட்சியர் தகவல்

Update: 2023-12-25 16:46 GMT

ரூ. 1.42 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் - மாவட்ட ஆட்சியர் தகவல்

கடந்த வாரம் தமிழகத்திக் தென் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ததன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். தமிழக முதல்வரின் உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் அனைத்து சீரமைப்பு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சீர் செய்வதற்கு, அரசுடன் இணைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களது பங்களிப்பினை ஏற்படுத்திட, தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் தற்சமயம் வரை அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 19.12.2023 முதல் 23.12.2023 வரை கனரக வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு சமைக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள், பிஸ்கட், ரஸ்க், பால்பவுடர், தண்ணீர் பாட்டில்கள், மெழுகுவர்த்திகள், அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.98,81,000/- மதிப்பீட்டிலும், மேலும், பள்ளி மாணவ மாணவியர்களின் பங்களிப்புடன் ரூ.42,80,000/-மதிப்பீட்டிலனா நிவாரணப் பொருட்களும் என ஆக மொத்தம் ரூ.1,41,61,000/- மதிப்பீட்டிலாள பல்வேறு வகையான நிவாரணப் பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தற்சமயம் வரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, அரசுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News