சேலத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

சேலத்தில் உரிய ஆவணமின்றி மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற ரூ.4.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-04-04 10:10 GMT

கோப்பு படம் 

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் நேற்று மாலை பறக்கும் படை அதிகாரி ஜெயந்தி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் அவரிடம் ரூ.4 லட்சத்து ரூ.70 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணையில், அவர் சேலம் 2-வது அக்ரஹாரம் பகுதியில் கண்ணாடி கடை நடத்தி வரும் சுல்தான் சையத் இப்ராகீம் (வயது 40) என்பதும், செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து பணத்தை வியாபாரத்துக்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வடக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாமோதரனிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News