கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் ரூ.4.43 லட்சம் கொள்ளை
Update: 2023-11-24 07:32 GMT
கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டைச் சேர்ந்தவர் குமார், 55; டாக்டர். கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனை வைத்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 21ம் தேதி இரவு 9:15 மணியளவில் 4 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயை மேஜை டிராயரில் வைத்து பூட்டி விட்டு,மருத்துவமனையை மூடிச் சென்றுள்ளார். மறுநாள் 22ம் தேதி காலை பார்த்தபோது, மேஜை டிராயர் உடைக்கப்பட்டு, 4.43 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.