ரூ 57,500 ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உரிய ஆவணகளின்றி லாரியில் கொண்டு வந்த ரூ 57,500 ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-04-10 10:04 GMT
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பகலவாடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு லாரியை மறித்து சோதனை செய்தனர்.அதில் லாரி டிரைவர் ஏழுமலையிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 57 ஆயிரத்து 500 ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் ரொக்க பணத்தை துறையூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டது .இதனைத் தொடர்ந்து பணம் துறையூர் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.