இன்ஜினியரிடம் ரூ.6.5 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஏற்காடு இன்ஜினியரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6.5லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update: 2023-12-20 01:16 GMT

ஏற்காடு என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்த 31 வயது என்ஜினீயர் ஒருவர் வீட்டில் இருந்து சென்னையில் உள்ள நிறுவனத்துக்கு வேலை பார்த்து வருகிறார். அவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பகுதி நேர வேலைவாய்ப்பு குறித்த தகவல் இருந்தது. அதில் பேசிய நபர், ஒரு குறிப்பிட்ட ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக கமிஷன் தருகிறோம் என்றார்.

Advertisement

இதை நம்பிய அவர் மர்ம நபர் தெரிவித்த ஆன்லைனில் 12 தவணைகளாக ரூ.6 லட்சத்து 67 ஆயிரத்து 524 முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு கமிஷன் தொகை ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த என்ஜினீயர் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மராட்டியம், பெங்களூரூ உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வங்கிகளின் எண்களை மோசடிக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News