ரூ. 7.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்புகள்

திருமயம் ஒன்றியம் ராங்கியத்தில் சுகாதாரத்துறை சார்பில் ரூ.7 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 கட்டடங்களின் திறப்பு விழா நடந்தது.

Update: 2024-03-13 15:56 GMT

திருமயம் ஒன்றியம் ராங்கியத்தில் சுகாதாரத்துறை சார்பில் ரூபாய் 7 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை வகித்தார். திருமயம் ஒன்றிய குழு தலைவர் அழ. ராமு, முன்னாள் தலைவர் சிதம்ப ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் ரகுபதி, மெய் நாதன், எம் எல் ஏக்கள் முத்துராஜா, சின்னத்துரை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராம் கணேசன் ஆகியோர் பேசினர்.

புதிய கட்டிடங்களை திறந்து வைத்து மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில் ராங்கியம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் கட்டடம், செவிலியர் குடியிருப்புகள் ரூபாய் 73 லட்சத்தில் கட்டப்பட்ட திறக்கப்பட்டுள்ளது. இதில் இணை இயக்குனர் ஸ்ரீ பிரியா தேன்மொழி நன்றி கூறினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் காசநோய், தொழுநோய் ஒழிப்பு திட்டம், சித்த மருத்துவம், டெங்கு கொசு ஒழிப்புத் திட்டம் ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

Tags:    

Similar News