கிலோ ரூ.29: ஆர்வமுடன் வாங்கி சென்ற மக்கள்
நாமக்கலில் பாரத் அரிசி 10 கிலோ பையை ரூ. 290 என்ற விலையில் பாரத் அரிசியை வாங்கிச் சென்றனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-01 13:06 GMT
நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில், மத்திய அரசின் பாரத் அரிசி விற்பனை துவக்க விழா நாமக்கல் உழவர் சந்தை அருகில் நடைபெற்றது. மாநில பாஜக துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, டாக்டர் ராமலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாரத் அரசி விற்பனையை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் முத்துக்குமார், சேதுராமன், நகர பாஜக தலைவர் சரவணன், மத்திய அரசு திட்டங்கள் பிரிவு மாநில துணைத் தலைவர் லோகேந்திரன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். ஏராளமான பொதுமக்கள் 10 கிலோ அரிசி பை ரூ. 290 என்ற விலையில் பாரத் அரிசியை வாங்கிச் சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் அரிசி பைகள் விற்பனை செய்ய பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.